Type Here to Get Search Results !

தருமபுரி மாவட்டத்திற்கு அன்புமணி ராமதாஸ் வருகையொட்டி பாலக்கோடு மரு.அன்புமணி அணி பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.


பாலக்கோடு, அக். 27 -

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் பாமக (அன்புமணி அணி) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் எஸ்.பி. வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது. தொகுதி பொறுப்பாளர் கே.இ. கிருஷ்ணன் வரவேற்று பேசினார். மாநில இளைஞர் அணி செயலாளர் முருகசாமி, மாநில துணைத் தலைவர் பாடி செல்வம், மாநிலப் பொறுப்பாளர்கள் வேளவள்ளி சேகர், அன்பழகன், மாநில மகளிரணி பொறுப்பாளர் சரவணக்குமாரி, பெரியம்மா நாகு, பானு, பாலகிருஷ்ணன், வாசு நாயுடு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கூட்டத்தில் வரும் நவம்பர் 4ஆம் தேதி தருமபுரியில் நடைபெறவுள்ள “தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்” மற்றும் பொதுக்குழுவில் பங்கேற்க வரவுள்ள பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, 5 ஆண்டுகளுக்கு முன் முதல்வர் ஸ்டாலின் அளித்த என்னேகொல்புதூர், தூள் செட்டி ஏரிகால்வாய் திட்டங்கள் இதுவரை நிறைவேற்றப்படாதது குறித்து கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், தும்பலஅள்ளி கால்வாய் திட்டம், புலிகரை கால்வாய் திட்டம் உள்ளிட்ட நீர் திட்டங்களை விரைவாக நிறைவேற்ற கோரியும், 15 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் துரை, சுகர்மில் துரை, சரவணன், முருகன், சிலம்பரசன், குமார், சஞ்சீவன், கண்ணன், சின்னசாமி, பழனி, ஒன்றிய தலைவர்கள் ஏழுகுண்டன், மாதையன், ராமசந்திரன், மகாதேவன், கோவிந்தசாமி, நகர தலைவர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies