முன்பு ஆண்டுக்கு 4 லட்சம் டன் கரும்பை அரைத்த இந்த ஆலை, தற்போது 40 ஆயிரம் டனும் அரைக்க முடியாத நிலையில் உள்ளது. தொழிலாளர்கள் ஊதியம் தாமதம், ஊழல், விவசாயிகளுக்கு உதவியின்மை போன்ற காரணங்களால் தொழிற்சாலை உயிர்வாழ போராடும் நிலையில் உள்ளது.
இந்த நிலையில், 2020-23 ஆண்டுகளில் பணியாற்றியபோது முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எதிர்கொண்ட தொழிலாளர் நல அலுவலர் ஆனந்தராஜ் மீண்டும் பாலக்கோடு சர்க்கரை ஆலைக்கு மாற்றப்பட்டதாகத் தகவல் கிடைத்தது. இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளர்கள், “இவர் மீது 81 விசாரணை நடைபெற்று வருகிறது; இவரை ஆலைக்குள் அனுமதிக்க முடியாது” எனக் கூறி போராட்டத்தில் இறங்கினர்.
அதேபோல் கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவனின் செயல்பாடுகளுக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சுமார் 200 தொழிலாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து, சர்க்கரை ஆலை நுழைவாயிலில் தரையில் அமர்ந்து தர்ணா நடத்தினர்.
அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தகவலறிந்த சர்க்கரை ஆலை செயல் ஆட்சியர் ரவி சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தொழிலாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து தொழிலாளர்கள் போராட்டத்தை முடித்து பணிக்குச் சென்றனர்.

.jpg)