ஏரியூர். அக். 14 -
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே அமைந்த ஏரியூர் கிராமத்தில் வைகை தொண்டு நிறுவனம், 26 பெற்றோர் இல்லா மாணவ மாணவிகளுக்கு தீபாவளியை சிறப்பிக்கும் வகையில் புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் உணவு வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தது.
நிகழ்ச்சியை வைகை தொண்டு நிறுவன இயக்குனர் குமரேசன் ஒருங்கிணைத்து நடத்தியார். நன்கொடை வழங்கிய நல் உள்ளங்கள் நேரில் வந்து மாணவ மாணவிகளை பென்னாகரம் விமல் சில்க் ஹவுஸ்-க்கு அழைத்து சென்று, அவர்கள் விரும்பும் ஆடைகளைத் தேர்வு செய்து வழங்கினர். வைகை தொண்டு நிறுவனம் சார்பாக மாணவ மாணவிகள், நல் உள்ளர்கள் மற்றும் சமூக உறுப்பினர்களுக்கு நன்றிகள் தெரிவிக்கப்பட்டு, மக்கள் நிறுவனத்தின் சமூக சேவை முயற்சிகளை பாராட்டி வருகின்றனர்.