Type Here to Get Search Results !

இண்டூர் ஏரியில் 5,000 பனை விதைகள் நட்டுத் துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சித் தலைவர் ரே. சதீஷ்.


தருமபுரி, அக். 15 -

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், இண்டூர் ஏரியில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, தமிழ்நாடு பசுமை இயக்கம், மாவட்ட நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை, தமிழ்நாடு தன்னார் வளர் அமைப்பு சார்பில் மற்றும் ஆதி பவுண்டேஷன் இணைந்து 5,000 பனை விதைகள் நடும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ரே. சதீஷ், இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி பனை விதை நடும் நிகழ்வை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட திட்ட இயக்குநர் ரூபன் சங்கர் ராஜ், மாவட்ட வனத்துறை அலுவலர் ராஜாங்கம், மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி, வனத்துறை இணை அலுவலர் சரவணன், தாசில்தார் பிரசன்ன மூர்த்தி சுகுமார், நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் நீலமேகம் இளங்குமரன், கிராம நிர்வாக அலுவலர் ராமசுந்தரம், ஊராட்சி செயலாளர் கணேசன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


அதேபோல் பல்வேறு சமூக மற்றும் தன்னார்வ அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் எண்ணங்களின் சங்கமம் ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், மை தருமபுரி சதீஷ்குமார், தமிழ்செல்வன், இந்தியன் பில்லர்ஸ் வினோத், JCI பாபு, BNI பூங்கொடி, திமுக ஒன்றிய செயலாளர் வைகுந்தம், NPP பெரியண்ணன், பாமக ஒன்றிய செயலாளர் சக்தி, மருத்துவர் சக்திவேல், முன்னாள் தலைவர் சுரேஷ், ரங்கன், சங்கர், சின்ன பையன், பூக்கடை மூர்த்தி, ரவி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


ஆதி பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைவர் ஆதிமூலம் அவர்கள் கலந்து கொண்டு அனைவரையும் வரவேற்றார். அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் இளஞ்செழியன், பிரபு, தம்பிதுரை, சக்கரவர்த்தி, மு.பிரேம்குமார் கோவிந்தசாமி, விக்னேஷ், லட்சுமணன், சூர்யா, ரங்கநாதன் ஆகியோர் உடன் இருந்தனர். மேலும் மருதம் நெல்லி பாலிடெக்னிக் கல்லூரி, இண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ–மாணவிகள், நண்பர்கள் மற்றும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies