.jpg)
அரூர், அக். 11 -
தருமபுரி மாவட்டம் அரூரில் திரு.வி.க. நகரில் இந்தியாவின் மிகப்பெரிய எலக்ட்ரானிக் ரீடெய்லரான ரிலையன்ஸ் டிஜிட்டல் தனது புதிய கடையை இன்று (அக்டோபர் 11, 2025) திறந்து வைத்துள்ளது. 5240 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த நவீன டெக்னாலஜி மையம் வாடிக்கையாளர்களுக்கு முழுமையான எலக்ட்ரானிக்ஸ் ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடையில் வாங்கிய பிறகு எலக்ட்ரானிக் சாதனங்களின் பராமரிப்பிற்கான எக்ஸ்பெர்ட் டெக் ஸ்குவாட் மற்றும் ரெஸ்க்யூ சர்வீஸ் எக்ஸ்பெர்ட்கள் பணியாற்றுகின்றனர். மேலும், வேகமான டெலிவரி மற்றும் இன்ஸ்டாலேஷன் வசதி மூலம் வாடிக்கையாளர்கள் தாமதமின்றி தங்கள் புதிய டெக்னாலஜியை அனுபவிக்க முடிகிறது.
புதிய கடை திறப்பை முன்னிட்டு முன்னதாக வருவோருக்கான சிறப்பு தொடக்க சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முன்னணி வங்கி கார்டுகளுக்கு 10% வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச பிராண்டுகளின் 2000-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை வழங்குகிறது. இதில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் டிவிகள், வாஷிங் மெஷின்கள், ரெஃப்ரிஜிரேட்டர்கள், ஹோம் தியேட்டர்கள், டிஜிட்டல் கேமராக்கள், லேப்டாப்புகள், எலக்ட்ரானிக் ஆக்சசரீஸ் மற்றும் வீட்டு பயன்பாட்டு பல சாதனங்கள் அடங்கும்.
ரிலையன்ஸ் டிஜிட்டல் நிறுவனம் “தொழில்நுட்பத்தை அனைவருக்கும் எளிதாகவும் எட்டக்கூடியதாகவும் மாற்றுதல்” என்ற நோக்கத்துடன் இயங்கி வருகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற தொழில்நுட்பத்தை எளிதாக பெற ஈசி ஈஎம்ஐ மற்றும் பல்வேறு கடனுதவி திட்டங்களும் வழங்கப்பட்டுள்ளன.