தருமபுரி, அக். 14 -
தருமபுரி அடுத்த பையசுஅள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தில், இயற்பியல் துறை சார்பாக இரண்டு நாள் “பொருட்களில் இயற்பியலின் சமீபத்திய முன்னேற்றம் குறித்த தேசிய பட்டறை” நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயற்பியல் துறை தலைவர் மற்றும் இயக்குநர் (பொறுப்பு) முனைவர் செல்வ பாண்டியன் தலைமை உரையாற்றினார். நிகழ்ச்சிக்கு முனைவர் பிரசாத் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக, பெங்களூரைச் சேர்ந்த கிரிஸ்ட் பல்கலைக்கழகத்தின் முனைவர் குடென்னவர், “கதிர்வீச்சுப் பொருட்களில் சமீபத்திய முன்னேற்றங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அதேபோல், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் முனைவர் அறிவானந்தன், “வெப்ப மின் பொருட்களின் இயற்பியல்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
முனைவர் கோபாலகிருஷ்ணன் நன்றி உரை வழங்கினார். முனைவர் செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். இயற்பியல் துறை சார்ந்த மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.