ஒகேனக்கல், அக்டோபர் 02:
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு விடுமுறை நாட்கள், குறிப்பாக வார இறுதி நாட்களில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருகை தருவது வழக்கம். இந்நிலையில், பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிவடைந்து விடுமுறை அறிவிக்கப்பட்டதுடன், ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி தொடர் விடுமுறை கிடைத்ததாலும், இன்று காலை முதலே ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர்.
இங்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்து இயற்கையாக கொட்டும் அருவிகளின் அழகை ரசித்ததோடு, ஆயில் மசாஜ் செய்து சோர்வு தீர்த்தும், மீன் சமையலை சுவைத்தும், மேலும் மெயின் அருவி மற்றும் சினி ஃபால்ஸ் ஆற்றுப்பகுதிகளில் நீராடியும் மகிழ்ச்சி அடைந்தனர்.