பாலக்கோடு, அக்டோபர் 02:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ் (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்க்) நூற்றாண்டு துவக்க விழா மற்றும் விஜயதசமி விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி ஸ்ரீ ராமஜெயம் குருப்ஸ் நிறுவனர் கிருஷ்ணன் தலைமையில் நடந்தது.
இவ்விழாவில் ஆர்.எஸ்.எஸ் மாவட்டத் தலைவர் மற்றும் ஸ்ரீ மூகாம்பிகை கல்வி குழுமம் நிறுவனர் கோவிந்தராஜ், கருமலை ஆண்டவர் அக்ரோ சர்வீஸ் நிறுவனர் ராஜா கவுண்டர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் ஆர்.எஸ்.எஸ் ஒன்றிய தலைவர் பத்ரிநாராயணன், ஒன்றிய செயலாளர் வாசுதேவன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.எஸ் மாநில அமைப்பாளர் ஸ்ரீ ப்ரஷோப குமார் கலந்து கொண்டு, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் நூற்றாண்டு துவக்க விழாவின் முக்கியத்துவத்தை விளக்கினார். அவர் உரையில், “நேற்று பாரத பிரதமர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அஞ்சல் தலை மற்றும் நினைவு நாணயத்தை வெளியிட்டார். தன்னார்வலர்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு, கலாசார விழிப்புணர்வு, ஒழுக்கம், சேவை, சமூக பொறுப்புணர்வு போன்ற பண்புகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இந்த நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது” எனக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

.jpg)
.jpg)