Type Here to Get Search Results !

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாப்பாரப்பட்டி மற்றும் ஆலமரத்துப்பட்டியில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு.


பாப்பாரப்பட்டி, அக்டோபர் 29:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தருமபுரி மாவட்டத்தின் பாப்பாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன.


பாப்பாரப்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பிற்கு தலைமை ஆசிரியர் பெ. சுமதி தலைமையிலவும், ஆலமரத்துப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சிக்கு தலைமை ஆசிரியர் சிவசுப்பிரமணியம் தலைமையிலவும் வகுப்புகள் நடைபெற்றன.


இப்பயிற்சியின் நோக்க உரையை கம்பன் கழக செயலாளர் புலவர் குமரவேல் எடுத்துரைத்து, திருக்குறளின் முக்கியத்துவத்தையும் அதன் வாழ்க்கைச் சிறப்பையும் விளக்கி மாணவர்களை வரவேற்றார்.


பயிற்சியை உலக தமிழ் பண்பாட்டுச் சங்கத் தலைவர் தமிழ் மகன் ப. இளங்கோ தொடங்கி வைத்து மாணவர்களை உரையாற்றியபோது,

“மாணவர்கள் ஒழுக்கத்துடனும் நற்பண்புகளுடனும் வாழ, நாள்தோறும் ஒரு திருக்குறளை கற்று மனப்பாடம் செய்ய வேண்டும். அதுவே நம்முடைய நற்பழக்கங்களையும் கல்வி ஆர்வத்தையும் மேம்படுத்தும்” எனக் கூறினார்.


பயிற்சியை முதுகலை ஆசிரியர் பெ. சுமதி, தமிழ் ஆசிரியர்கள் இந்திரா மற்றும் புஷ்பாகரன் ஆகியோர் இணைந்து வழங்கினர். மாணவர்களின் பேச்சுத் திறன் மற்றும் திருக்குறளில் காணப்பட்ட ஆர்வம் மதிப்பீடு செய்யப்பட்டு, சிறந்த மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாலசுப்பிரமணியம் உட்பட பலரும் கலந்து கொண்டு பயிற்சியை சிறப்பித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் கம்பன் கழக இணை செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார். தமிழ்க் கவிஞர் மன்ற ஒருங்கிணைப்பாளர் கூத்தப்பாடி மா. பழனி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies