இந்நாளை முன்னிட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது:
“வருவாயை உயர்த்தியும், செலவுகளைக் குறைத்தும் திறம்பட வாழ வேண்டும் என்பதை அய்யன் திருவள்ளுவர் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் கூறியுள்ளார்:
‘வாரி பெருக்கி வளம்படுத் துற்றவைஆராய்வான் செய்க வினை.’அதாவது, வருமானம் வரக்கூடிய வழிகளை விரிவாக்கி, வளங்களையும் பெருக்கி, இடையூறுகளை நீக்கிச் செயல் புரிவதே திறமையான வாழ்க்கை என்று அர்த்தம்.”
முதலமைச்சர் மேலும் கூறியதாவது:
“பண்டைய காலங்களில் மக்கள் மண் உண்டியல் வழியாக சேமித்தனர். இன்றோ வங்கிகள் மற்றும் அஞ்சலகங்களில் பாதுகாப்பான முறையில் சேமிக்கும் வசதிகள் பெருகியுள்ளன. ஒவ்வொருவரும் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியைச் சேமிக்க வேண்டும். அந்தச் சேமிப்பு குடும்பத்திற்கும், எதிர்காலத்திற்கும் நம்பிக்கையையும் பாதுகாப்பையும் அளிக்கிறது.”
அவர் மேலும் குறிப்பிட்டதாவது:
“சிறிது சிறிதாகச் சேமிப்பது உயர்கல்வி, திருமணம், மருத்துவம், வீடு கட்டுதல் போன்ற அவசரச் செலவுகளைச் சமாளிக்க உதவுகிறது. எனவே, ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து, வரவுக்குள் வாழ்ந்து சிக்கனமாகச் சேமிக்க வேண்டும்.”
இறுதியாக முதலமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்:
“வாழ்க்கை சிறப்பாக அமைய, அனைவரும் சிக்கனமாக வாழ்ந்து அருகிலுள்ள அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி சேமிப்பில் ஈடுபடுங்கள்.”
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்.

.jpg)