Type Here to Get Search Results !

தருமபுரியில் வரும் அக்டோபர் 17-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


தருமபுரி, அக். 13 -


தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 17.10.2025 (வெள்ளிக்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்களின் தலைமையில், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:

“தருமபுரி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து விவசாயிகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு, வேளாண்மை தொடர்பான தங்களது குறைகள் மற்றும் கருத்துகளை எடுத்துக்கூறி பயனடையலாம்,”
என்று தெரிவித்தார்.


மாவட்டம் முழுவதிலும் உள்ள விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை இக்கூட்டத்தின் வாயிலாக நேரடியாக மாவட்ட நிர்வாகத்திடம் முன்வைக்கலாம் என்றும் ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies