Type Here to Get Search Results !

தருமபுரியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை போலி ஒத்திகை – மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஸ் தலைமையில் நடைபெற்றது.


தருமபுரி, அக். 13 -

தருமபுரி மாவட்டம் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மழைவெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்த போலி ஒத்திகை இன்று (13.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசியதாவது:

“மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழைக்காலங்களில் எவ்வித அசம்பாவிதங்களும், உயிரிழப்புகளும் ஏற்படாமல் தடுக்க, பாதுகாப்பு நடவடிக்கையாக இப்போலி ஒத்திகை நடத்தப்படுகிறது,”
என்று தெரிவித்தார்.


தீயணைப்பு துறையின் சார்பில் நடைபெற்ற இப்பயிற்சியில், ரோப்லான்ஞ்சர், மோட்டார் போட், லைப்ஜாக்கெட், லைப் பாய், ரெஸ்கியூ டியூப், ரெஸ்கியூ துரோபேக், ஹைட்ராலிக் கட்டர், பவர் ஷா உள்ளிட்ட பல நவீன மீட்பு உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சித்தலைவரின் சமூக பொறுப்புணர்வு (CSR) நிதியில் இருந்து வழங்கப்பட்ட ஸ்கூபா டைவிங் கருவி மற்றும் விலங்கு மீட்பு வலைகள் நிகழ்வில் சிறப்பாக அறிமுகப்படுத்தப்பட்டன.


பயிற்சியில், ஏணி மற்றும் மோட்டார் படகுகள் மூலம் மீட்பது, லைப்ஜாக்கெட் உதவியுடன் மீட்பது, வெள்ளத்தில் சிக்கிய விலங்குகளை நவீன மீட்பு வலை மூலம் காப்பாற்றுவது, ரோப்லான்ஞ்சர் மற்றும் ஸ்கூபா கருவிகள் மூலம் நீரில் சிக்கியவர்களை மீட்பது, மேலும் மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது போன்ற பல்வேறு நிகழ்வுகள் தத்ரூபமாக காட்சிப்படுத்தப்பட்டன.


இதனைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையின் செயற்கருவிகள் மற்றும் சிறப்பு உபகரணங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், தீயணைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் செல்வி பி. அம்பிகா, துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies