Type Here to Get Search Results !

உங்களது பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்னும் கிடைக்கவில்லைவா? இறுதி வாய்ப்பு இப்போது!


தருமபுரி, அக். 13 -

மார்ச் 2015 முதல் ஆகஸ்ட் 2022 வரை நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது மற்றும் துணைத்தேர்வுகளில் கலந்து கொண்ட தனித்தேர்வர்கள் பலர் இதுவரை தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளாமல் உள்ளனர்.


இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்:

“அத்தகைய தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு அல்லது தற்காலிக மதிப்பெண் பட்டியல் போன்ற உரிய ஆளறி சான்றிதழ்களை சமர்ப்பித்து,
13.10.2025 முதல் 31.10.2025 வரை கீழ்க்கண்ட முகவரியில் நேரில் வந்து தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்,”
என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேற்குறிப்பிட்ட தேதிக்குப் பிறகு உரிமை கோரப்படாத சான்றிதழ்கள், உரிய அரசாணையின்படி கழிவுத்தாட்களாக கருதி அழிக்கப்படும் என்பதால், தற்போதைய இறுதி வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

📍 அலுவலக முகவரி:
அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகம்,
முதன்மைக் கல்வி அலுவலகம் (இரண்டாம் தளம்),
ஆட்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி – 636705.
📞 தொலைபேசி: 04342 – 233812

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies