மேலும், தகுதியான தமிழறிஞர்களுக்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணச்சலுகையும் வழங்கப்படுகிறது. தமிழ்த்தொண்டர் மறைவுக்குப் பின்னர், அவரின் வாழ்விணையர் / திருமணமாகாத மகள் / விதவை மகளுக்கும் வாழ்நாள் முழுவதும் ரூ. 2,500/- உதவித்தொகை மற்றும் ரூ. 500/- மருத்துவப்படி வழங்கப்படும்.
2025-2026ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள், இதுவரை ஆண்டுதோறும் 100 தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இந்த நலத்திட்டத்தின் பயனாளிகள் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். இதற்கென ரூ.48 இலட்சம் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ், 2025–2026ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் tamilvalarchithurai.org/agavai என்ற இணையதளம் வழியாகவும் அல்லது மூல விண்ணப்பமாகவும் நேரில் வழங்கலாம்.
🔸 விண்ணப்பிக்க தகுதி:
-
01.01.2025 அன்று 58 வயது நிறைவடைந்திருப்பது.
-
ஆண்டு வருவாய் ரூ.1,20,000/-க்கு உட்பட்டவராக இருப்பது (இணைய வழி வருமானச் சான்று இணைக்கப்பட வேண்டும்).
-
தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான விவரக் குறிப்பு.
-
இரண்டு தமிழறிஞர்களிடமிருந்து பரிந்துரைச் சான்று பெறப்பட வேண்டும்.
-
ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், மற்றும் மரபுரிமையரின் ஆதார் அட்டை இணைக்கப்பட வேண்டும்.
🔸 விண்ணப்பங்கள் அளிக்க வேண்டிய முகவரி:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில், 17.11.2025க்குள் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு www.tamilvalarchithurai.org என்ற வலைத்தளத்தைப் பார்வையிடலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
.gif)

.jpg)