மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
“தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் 475 முழு நேர நியாய விலை கடைகள், 571 பகுதி நேர நியாய விலை கடைகள், மற்றும் 10 மகளிர் சுய உதவி குழு நடத்தும் நியாய விலை கடைகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 1056 நியாய விலை கடைகள் உள்ளன. இதில் 4,75,713 குடும்ப அட்டைகள் உள்ளன; அதில் முதியோர் ஓய்வூதிய குடும்ப அட்டைகள் 58,626 ஆகும். முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு 41,921 சேலைகள் மற்றும் 16,702 வேட்டிகள் வழங்கப்பட உள்ளது,”என்று அவர் கூறினார்.
இன்றைய தினம், ஓய்வூதிய குடும்ப அட்டைதாரர்களுக்கான இலவச வேட்டி-சேலை வழங்கும் நிகழ்வு ஒட்டப்பட்டி நியாய விலை கடை, நல்லம்பள்ளி பொது விநியோகத் திட்ட வட்டாரத்தில் உள்ள ஏ.ஜெட்டிஅள்ளி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்றது. இந்நியாய விலை கடையில் மொத்தம் 799 குடும்ப அட்டைகள் உள்ளன. இதில் 70 ஓய்வூதிய குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் இலவச வேட்டி-சேலை வழங்கப்படுகிறது.
மேலும், 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு, தருமபுரி மாவட்டத்தில் ஏழை எளிய மக்கள் பொது விநியோகத்திட்ட பொருட்களை எளிதில் பெறவேண்டும் என்ற நோக்கில் 23 முழு நேர நியாய விலை கடைகள் மற்றும் 28 பகுதி நேர நியாய விலை கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி. கவிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. சரவணன், தமிழ்நாடு நுகர் பொருள் வணிப கலக மேலாளர் திரு. தணிகாசலம், தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி. காயத்ரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு. கதிரவன், மாவட்ட துணைப்பதிவாளர் திருமதி. விஷ்ணுபிரியா, முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் முதியோர் ஓய்வூதிய திட்ட குடும்ப அட்டைதாரர்கள் கலந்துகொண்டனர்.
.gif)

.jpg)