தீபாவளி பண்டிகையையொட்டி, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் நடைபெற்ற வாரச் சந்தையில் ஆடுகள் விற்பனை பரபரப்பாக நடைபெற்றது. பென்னாகரத்தில் “சந்தை தோப்பு” என்ற இடத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் வாரச் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
மலைப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்படும் ஆடுகளுக்கு வியாபாரிகளிடையே அதிக வரவேற்பு கிடைத்தது. இதனால் இந்த சந்தைக்கு சேலம், தலைவாசல், கெங்கவல்லி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஆடுகளை வாங்கிச் சென்றனர். இன்றைய வாரச் சந்தையில் தீபாவளி பண்டிகையையொட்டி 5,000-க்கும் மேற்பட்ட செம்மறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. எடைக்கு ஏற்ப ₹2,000 முதல் ₹15,000 வரை விலை போனது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போட்டி போட்டு விலை கேட்டதால் சந்தை பரபரப்பாக இருந்தது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் ஞாயிற்றுக்கிழமையிலும் பென்னாகரம் வாரச் சந்தை கூடும் என சந்தை ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்தனர்.
.gif)

.jpg)