மாவட்ட செயலாளர் கே. பச்சியப்பன் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் முத்துலட்சுமி சேகர், மாவட்ட பொருளாளர் கே. கிருஷ்ணன், தருமபுரி ஒன்றிய செயலாளர் டி. திருஞானம், நிர்வாகிகள் குமுதா எம்., மாதம்மாள், கே. தேவன், திம்மன், மாதேஷ், கரூரான், முனியம்மாள், துரைசாமி, பெரியண்ணன், ஆறுமுகம், மஞ்சுளா, பசுவன், அண்ணாமலை, இமான், லட்சுமி, கணேசன், பார்வதி, சரவணன் கே., சண்முகம் எம்., முரளி ஆகியோர் கலந்து பேசினர்.
மாநில மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் முடிவில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 500 மாற்றுத்திறனாளிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. மேலும், மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் உறுப்பினர் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும், முன்னதாக இறந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கும் எனத் தெரிவித்தனர்.
.gif)

.jpg)