தருமபுரி, அக். 14:
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தருமபுரி மண்டலத்தின் சார்பில், நான்கு வழித்தடங்களில் தட நீட்டிப்பு மற்றும் மாற்றியமைக்கப்பட்ட மகளிர் விடியல் பேருந்து சேவைகள் இன்று (14.10.2025) மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அவர்களால், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டன.
மேலும், தருமபுரி மண்டலத்தில் 31 புதிய பேருந்துகள் மற்றும் 45 புனரமைக்கப்பட்ட பேருந்துகள், மகளிர் விடியல் பயணத்திற்காக 23 புதிய பேருந்துகள் மற்றும் 15 புனரமைக்கப்பட்ட பேருந்துகள் சேர்த்து மொத்தம் 76 பேருந்துகள் புதிய பொலிவுடன் சேவையில் உள்ளன என்றும் குறிப்பிட்டார்.
இன்றைய தினம் தொடங்கப்பட்ட புதிய வழித்தடங்கள்:
-
தருமபுரி – கேத்துரெட்டிப்பட்டி (தா. அய்யம்பட்டி உள்செல்லும் வழி)
-
அரூர் – மோட்டூர் (சாலூர் வழியாக)
-
பொம்மிடி – தருமபுரி (புதுப்பட்டி வழியாக)
-
தருமபுரி – சின்ன ஆனந்தூர் (அம்மன் கோயில் பகுதி வழியாக)
இந்த நான்கு வழித்தடங்களில் பேருந்து சேவைகள் துவங்கப்பட்டதன் மூலம் 7 கிராமங்களில் சுமார் 4,311 பேர் பயன்பெற உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.எஸ். மகேஸ்வரன், நகர மன்ற தலைவர் திருமதி. லட்சுமி நாட்டான் மாது, மற்றும் பல அரசு துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)