மாவட்ட ஆட்சித்தலைவர் குறிப்பிட்டதாவது:
“மாணவ, மாணவிகள் அனைவரும் தங்கள் வாழ்க்கை கனவுகளை தொடங்குவதற்கான பாதையை தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். இதற்காக தேவையான பயிற்சிகள் மற்றும் வழிமுறைகள் குறித்தும் தெரிந்து கொள்ள இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள், அதனை பெறுவதற்கான பயிற்சிகள், தொழில் முனைவோர்களாக நினைக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு மையத்தின் திட்டங்கள் மற்றும் வங்கிகளில் கிடைக்கும் கடனுதவிகள் பற்றியும் விரிவாக விளக்கப்படுகிறது,”என்று அவர் தெரிவித்தார்.
இச்செயல்திட்டத்தின் மூலம் மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறும் திறன் மற்றும் தொழில்நெறி அறிவு வளர்த்துக் கொள்ளலாம். “தன்னார்வ பயிலும் வட்டம் (STUDY CIRCLE)” என்ற பிரிவு, ஒவ்வொரு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும் செயல்பட்டு வருகிறது. தற்போது 1,000க்கும் மேற்பட்டவர்கள் இதில் உறுப்பினராக பயிற்சி பெற்றுள்ளனர்.
மையத்தில் மாணவர்கள் பயன்பெறும் வசதிகள்:
-
இலவச நூலகம்
-
இலவச கணினி பயன்பாடு (MCC)
-
இலவச Wi-Fi
-
நாள்தோறும் இலவச செய்தித்தாள்கள் மற்றும் பருவ இதழ்கள்
-
மெய்நிகர் கற்றல் இணையதளம் (VIRTUAL LEARNING PORTAL)
-
YouTube சேனல் வழியிலான பாடநெறிகள்
2023 முதல் இதுவரை 117 மாணவர்கள் பல்வேறு தேர்வுகளில் வெற்றி பெற்று வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். மேலும், 09.11.2025 அன்று நடைபெறவுள்ள TNUSRB-PC தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 03.10.2025 முதல் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் திருமதி ம. தீபா, அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.gif)

.jpg)