தருமபுரி, அக். 29 -
பொதுமக்களிடையே உடற்தகுதி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப்போட்டி ஆண்டு தோறும் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும் என அறிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட விளையாட்டரங்கம், தருமபுரியில் 01.11.2025 அன்று ஓட்டப்போட்டி நடைபெறவுள்ளது.
போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலருக்கும் இரண்டு பிரிவுகளில் நடத்தப்படும்:
-
17 முதல் 25 வயது வரை (01.01.2001 முதல் 31.12.2008 வரை பிறந்தவர்கள்)
-
25 வயதுக்கு மேற்பட்டவர்கள் (31.12.2000க்குள் பிறந்தவர்கள்)
ஓட்டப்பாதை விவரம்:
-
ஆண்கள் பிரிவு: மாவட்ட விளையாட்டரங்கம் → 4 ரோடு → அரசு மருத்துவ கல்லூரி → பாரதிபுரம் → திரும்பி விளையாட்டரங்கம்.
-
பெண்கள் பிரிவு: மாவட்ட விளையாட்டரங்கம் → 4 ரோடு → அரசு மருத்துவ கல்லூரி → திரும்பி விளையாட்டரங்கம்.
போட்டியில் ஏற்படக்கூடிய விபத்துகள் அல்லது தனிப்பட்ட இழப்புகளுக்கு பங்கேற்பாளர்களே பொறுப்பாக இருப்பர். தருமபுரி மாவட்டத்திலுள்ள 17 வயதிற்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள், விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி, தங்கள் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்துமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

.jpg)