தருமபுரி – அக். 31:
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், தருமபுரி சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட தருமபுரி மற்றும் நல்லம்பள்ளி ஒன்றியங்களின் BLA-2, BLC, BDR பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தருமபுரியில் உள்ள தங்கமணி மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் (SIR) தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தருமபுரி சட்டமன்ற தொகுதி பார்வையாளர் செங்குட்டுவன் கலந்து கொண்டு, “தொகுதிக்குட்பட்ட அனைத்து பூத்துகளிலும் அனைத்து நிலைகளிலும் உள்ள நிர்வாகிகளை அழைத்து தனித்தனி ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். மேலும், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் குறித்து நிர்வாகிகளுக்கு முழுமையான பயிற்சி அளிக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி, நகரச் செயலாளர் நாட்டான் மாது, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, தருமபுரி ஒன்றிய செயலாளர் காவேரி, நல்லம்பள்ளி ஒன்றிய செயலாளர் சண்முகம், மற்றும் பல நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளில் பங்கேற்றனர்.

.jpg)