தருமபுரி, அக். 2:
இந்தியத் திருநாட்டின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் தனது வாழ்க்கையையே அர்ப்பணித்த மகாத்மா காந்தியின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் நாள் நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, மாநில அரசு மற்றும் கதர் கிராமத் தொழில்கள் ஆணைக்குழுவினரால் தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு கதர் விற்பனை மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு,
-
கதர் – 30%
-
பட்டு – 30%
-
பாலியஸ்டர் – 30%என சிறப்பு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சித்தலைவர், “தருமபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் கிடைக்கும் துணிகளை பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள், தொழிலாளர்கள் அனைவரும் அதிக அளவில் வாங்கி, கிராமப்புற ஏழை பெண்கள் மற்றும் நெசவாளர்களின் வாழ்வில் ஒளி ஏற்றிட உதவ வேண்டும். இது காந்திஜியின் கனவுகளை நனவாக்கும் முயற்சியாகும்,” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில் காதி கிராப்ட் மேலாளர் திரு. செல்வம், ஆய்வாளர் திரு. ஜெயக்குமார், முன்னாள் மேலாளர் திரு. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)