Type Here to Get Search Results !

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் கோரி பொதுமக்கள் மனு – சேலம் கோட்ட அதிகாரிகள் உறுதி.


பொம்மிடி, அக்டோபர் 23:

பொம்மிடி ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில் நிறுத்தம் வழங்க கோரி, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் இன்று (23.10.2025) சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இம்மனுவை சங்க செயலாளர் பா. ஜெபசிங் தலைமையில், துணைத் தலைவர் திருமதி சங்கீதாஸ்ரீ, துணைச் செயலாளர்கள் இளங்கோவன், வெங்கடேசன், மற்றும் மூத்த உறுப்பினர் ரஃபீக் ஆகியோர் இணைந்து, கோட்ட இயக்க மேலாளர் திரு. சபரீஸ்குமார் மற்றும் கோட்ட துணை மேலாளர் திரு. சரவணன் ஆகியோரிடம் வழங்கினர்.


பொம்மிடி ரயில் நிலையத்தில் நிறுத்தம் கோரப்பட்டுள்ள ரயில்கள்:

  • கோவை எக்ஸ்பிரஸ் (12675/12676)

  • திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (12695/12696) அல்லது (12623/12624)

  • நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16339/16340)

  • பெங்களூரு நோக்கி செல்லும் (16315/16316) அல்லது (16525/16526) ரயில்கள்

  • விவேக் எக்ஸ்பிரஸ் (22503/22504)


மேலும், அரக்கோணம் மெமோவிற்கு டேனிஷ் பேட்டையில் நிறுத்தம் வழங்க வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மனுவை அதிகாரிகள் நேரில் பெற்றுக்கொண்டு, உரிய பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies