Type Here to Get Search Results !

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் – விண்ணப்பிக்க அழைப்பு


தருமபுரி, அக். 08 -

இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை திட்டம் (PM-YASASVI – Top Class Education in Schools for OBC, EBC & DNT Students) என்ற திட்டத்தின் கீழ் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (National Scholarship Portal - https://scholarships.gov.in) மூலம் விண்ணப்பிக்கலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: மத்திய அரசால் செயல்படுத்தப்படும் இத்திட்டம், பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் (EBC), மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 2025–26 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள், பட்டியலிடப்பட்ட (Top Class) பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடமிருந்து பெறப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்தை மிகக்கூடாது.

விண்ணப்பிக்க கடைசி தேதி 15.10.2025, கல்வி நிறுவனங்கள் விண்ணப்பங்களைச் சரிபார்க்க கடைசி தேதி 31.10.2025 என அறிவிக்கப்பட்டுள்ளது.


புதுப்பித்தல் (Renewal):
கடந்த நிதியாண்டில் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்கள், NSP இணையதளத்தில் Renewal Application இணைப்பின் மூலம் தங்கள் OTR Number (One Time Registration) பதிவு செய்து 2025–26க்கான விண்ணப்பத்தை புதுப்பிக்கலாம். 

புதிய விண்ணப்பம் (Fresh Application):
9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், NSP தளத்தில் தங்கள் கைப்பேசி எண் மற்றும் ஆதார் விவரங்களை உள்ளிட்டால் OTR Number & Password கைப்பேசிக்கு அனுப்பப்படும். அதனைப் பயன்படுத்தி தேவையான ஆவணங்களுடன் புதிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம்.

பட்டியலிடப்பட்ட பள்ளிகளின் விவரங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை
👉 https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm இணையதளத்தில் காணலாம்.அத்துடன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பங்கள் சரியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதா என உறுதி செய்து, அவற்றை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலருக்கு அனுப்ப வேண்டும் எனவும் ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு: https://scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் காணலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies