தருமபுரி, அக். 08 -
தருமபுரி மாவட்டம் மற்றும் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டபடி ஒவ்வொரு மாதமும் முதல் வார வெள்ளிக்கிழமையன்று நடைபெறுகிறது. அதற்கிணங்க, அக்டோபர் 2025 மாதத்திற்கான கூட்டம் வரும் 10.10.2025 (வெள்ளிக்கிழமை) காலை 11.00 மணிக்கு தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில் விவசாயிகளின் பிரச்சினைகள், நிலம், நீர், பாசனம், வேளாண் உதவித் திட்டங்கள் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக உரிய தீர்வுகள் வழங்கப்படும். எனவே, இந்த கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள், விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.