அரூர், அக். 08 -
தமிழக-கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி ஏற்பட்ட பட்டாசு கடை மற்றும் கிடங்கு வெடி விபத்தில், பயங்கர தீயில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர். அந்த விபத்தில், அரூர் அருகே உள்ள டி.அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த வேடப்பன், முனிவேல், இளம்பருதி, ஆகாஷ், ஆதிகேசவன், விஜயராகவன், கிரி ஆகிய ஏழு பேர் உடல் கருகி பலியாகினர்.
இவர்களின் நினைவாக, இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அத்திப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் போது, ஊர் பொதுமக்கள் சார்பில் உயிரிழந்தோரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று, துயரத்தை நினைவுகூர்ந்தனர்.