தருமபுரி, அக். 09 -
தருமபுரி — பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், மேலாண்மைத் துறை மற்றும் JCI WINGS Dharamapuri இணைந்து, இரண்டு நாள் “பயனுள்ள பொதுப் பேச்சுத் திறன்கள்” என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குனர் பொறுப்பு முனைவர் செல்வ பாண்டியன் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். மேலாண்மைத் துறை தலைவர் முனைவர் கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கணேசன் (தேசிய பயிற்சியாளர், சென்னை) மற்றும் பிரேம்நாத் பாண்டியன் (மண்டல இயக்குநர், மேலாண்மைத் தொழில், சென்னை) ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பொதுப் பேச்சுத் திறன்கள் மற்றும் தனிநபர் வளர்ச்சி குறித்த சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் சாந்தினி, நிவேதினி, பிரபாகரன், கபில்தேவ், கோகுல் உள்ளிட்ட மாணவர்கள் பங்கேற்றனர். முனைவர் சுரேஷ் நன்றியுரை வழங்கினார். முனைவர் தஸ்மின் மற்றும் முனைவர் முகமது நபி உடனிருந்தனர். இரண்டாம் ஆண்டு மேலாண்மைத் துறை மாணவர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு பயனடைந்தனர்.