தருமபுரி. அக். 22 -
தருமபுரி அடுத்த பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஆங்கிலத் துறையின் சார்பாக தொழில் முனைவோருக்கான விழிப்புணர்வு சிறப்பு கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்வில் ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவர்களுக்கு தொழில் முனைவோர் வாய்ப்புகள், வியாபார முதலீடு மற்றும் வளர்ச்சி வாய்ப்புள்ள துறைகள் பற்றிய விளக்கங்களை வழங்கினார்.
முனைவர் சுரேஷ்குமார், சந்தை தேவைகள் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு எவ்வாறு முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்ய வேண்டும், அரசின் பல்வேறு முதலீட்டு திட்டங்கள், காப்பீடு திட்டங்கள், பணத்தை சரியான முறையில் சேமித்தல் மற்றும் முதலீடு செய்யும் ஆக்கப்பூர்வமான வழிகள் போன்றவை மாணவர்களுக்கு எளிதாக புரியும் வகையில் எடுத்துரைத்தார்.
-
இரண்டாம் ஆண்டு மாணவன் பாலச்சந்தர் அனைவரையும் வரவேற்று பேசினார்.
-
செல்வி சினேகா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.
-
முதலாம் ஆண்டு மாணவி செல்வி கிருத்திகா நன்றியுரையை வழங்கினார்.
-
இரண்டாம் ஆண்டு மாணவி ஹேமலதா நிகழ்வை தொகுத்து வழங்கினார்.
நிகழ்வுக்கான ஏற்பாடுகள் கௌரவ விரிவுரையாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்களால் கவனமாக செய்யப்பட்டிருந்தது.

.jpg)