பென்னாகரம், அக் 07 -
புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து BDO அலுவலகம் அருகிலும், இந்திரா நகர் 4 ரோடு, போடூர் 4 ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியான தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நடைபெற்றன. கூட்டத்தில் வட்டார துணைச் செயலாளர் மாரியப்பன் தலைமையிலானார். மாவட்ட செயலாளர் சிவா, மாநில பொருளாளர் அருண், மாநில இணைச் செயலாளர் கோபிநாத் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
இறுதியில் வட்டார குழு உறுப்பினர் தோழர் சத்தியமூர்த்தி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் கார்ப்பரேட் அரசியலின் கவர்ச்சி, சினிமாவின் சீரழிவு, ஓட்டுக்காக பிரியாணி மற்றும் பணம் வழங்கும் அரசியல் ஆகியவற்றை புறக்கணிக்க மக்களை வலியுறுத்தினர். மக்களுக்குத் தேவையான சமூக மாற்றத்தைக் கொண்ட வர்க்க அரசியல் மற்றும் பகத்சிங் பாதையில் போராட்டம் தொடர வேண்டுமென தெரிவித்தனர். நான்கு இடங்களிலும் நடைபெற்ற தெருமுனை கூட்டங்களில் பொதுமக்களிடம் பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

