அரூர், அக். 07 -
அரூர் சட்டமன்ற தொகுதியின் கீழ் செயல்படும் அரூர் மேற்கு ஒன்றியம் கீரைப்பட்டி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியம் சித்தேரி பகுதிகளில் இருந்து மாற்று கட்சியினர்கள் திமுகவில் இணைந்தனர்.
இதில்,
-
தேமுதிக மாவட்ட பிரதிநிதி V. முருகேசன் (கீரைப்பட்டி) மற்றும்
-
தமிழக வெற்றி கழகத்திலிருந்து விலகிய நந்தகுமார் (சித்தேரி ஊராட்சி) ஆகியோர்தங்கள் ஆதரவாளர்களுடன் சேர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
இந்த இணைவு நிகழ்ச்சி தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி (MP) அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் வே. சௌந்தரராசு, S. சந்தோஷ்குமார் மற்றும் பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு புதிய இணைவோருக்கு வரவேற்பு அளித்தனர்.

