பென்னாகரம், அக். 18, 2025
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம், ஏர்ரகொல்லனூர் ஏரி பகுதியில் பனை மர வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் பென்னாகரம் வருவாய் துறை, பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பென்னாகரம் பத்திரிக்கையாளர் மன்றம் இணைந்து பனை விதை நடவு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை வட்டாட்சியர் சண்முகசுந்தரம் தலைமையேற்று தொடங்கி வைத்தார். இதில் மொத்தம் 3,500 பனை விதைகள் ஏரி கரைப் பகுதிகளில் நடவு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் ஆ. ஜீவானந்தம், செயலாளர் சிவகுமார், பேரூராட்சி கவுன்சிலர்கள், நிர்வாக அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், பத்திரிகையாளர் மன்ற நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பனை வளர்ப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் நீர்ப்பாசன மேம்பாட்டிற்கும் முக்கியமானதாக இருப்பதால், இதுபோன்ற முயற்சிகள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.