1972 அக்டோபர் 17 அன்று, அனகாபுத்தூர் ராமலிங்கம் மூலம் பதிவு செய்யப்பட்டு, புரட்சித் தலைவர் எம்.ஜி. ராமச்சந்திரன் அவர்களால் தொடங்கப்பட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க) தனது 54ஆம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடியது.
இந்நிகழ்வை முன்னிட்டு பையர்நத்தம் ஊராட்சியில் நிர்வாகிகள் இல்லாமல், கட்சித் தொண்டர்கள் ஒன்றிணைந்து எம்.ஜி.ஆர். திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடினர்.
இந்த நிகழ்வில் அ.இ.அ.தி.மு.க தொண்டர்கள் டீ கடை சின்ராஜ், தீர்த்தகிரி, கிரிபிரசாத், குப்புசாமி, ராஜாராம், சரவணன், வெங்கடேசன், மந்திரி, சின்னபையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி செய்தியாளர்: ஜெ. வெங்கடேசன்