பாலக்கோடு, அக். 18, 2025 —
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) 54ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் ராஜா தலைமையேற்றார். நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் நாகராசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ரங்கநாதன், ஒன்றிய செயலாளர்கள் கோபால், வக்கீல் செந்தில், முன்னாள் நகர செயலாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவின் போது, நிர்வாகிகளும் தொண்டர்களும் இணைந்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன், சென்னப்பன், வீரமணி, நஞ்சுண்டன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் விமலன், புதூர் சுப்ரமணி, கவுன்சிலர் குருமணி, நிர்வாகிகள் கண்னையன், கொளந்தை, ராஜா சங்கர், ஆறுமுகம், பிரகாஷ், சாம்ராஜ், கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.