மாரண்டஅள்ளி, அக். 17 —
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில், வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூய்மை காவலர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தலைவர் வெங்கடேசன், தூய்மை காவலர்களுடன் சேர்ந்து பட்டாசு வெடித்து தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர், அனைத்து தூய்மை காவலர்களுக்கும் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, வெள்ளை பூசணி மற்றும் எலுமிச்சை பழத்தில் கற்பூரம் ஏற்றி, “அனைவரும் நலமாக இருக்க வேண்டும்” என வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இந்த விழாவில் வார்டு உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.