தருமபுரி, அக். 16:
தீபாவளி காலத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் அதிக ஒலி, புகை ஆகியவை மனிதர்களின் உடல் நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
🔹 முக்கிய வழிகாட்டுதல்கள்:
-
காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை மற்றும் மாலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க அனுமதி.
-
125 டெசிபல்க்கு மேற்பட்ட ஒலி எழுப்பும் ஹைட்ரஜன் பாம், புல்லட் பாம், சரவெடி போன்றவற்றை வெடிக்கக் கூடாது.
-
உச்சநீதிமன்ற விதிமுறைகளைக் கடைப்பிடிக்காத பட்டாசுகளை வாங்கவும், விற்கவும் கூடாது.
-
வாகனங்கள் நிறுத்திய இடங்கள், பெட்ரோல் நிலையங்கள், குடிசைப் பகுதிகள், மாடிக்கட்டிடங்கள் அருகில் பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
-
பட்டாசுகளை கையில் பிடித்து வெடிக்க வேண்டாம்; நீளமான ஊதுவத்தி மூலம் மட்டுமே கொளுத்தவும்.
-
குழந்தைகள் தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்கக் கூடாது; பெரியவர்கள் அருகில் இருக்க வேண்டும்.
-
தண்ணீர் நிரம்பிய வாளி அருகில் வைத்திருக்கவும்; தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக தண்ணீர் ஊற்றி மருத்துவரை அணுகவும்.
⚠️ பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் அபாயங்கள்:
-
தீக்காயம், நிரந்தர ஊனம் அல்லது உயிரிழப்பு.
-
மூத்தவர்கள், நோயாளிகள் மற்றும் குழந்தைகளுக்கு மனஅழுத்தம், மயக்கம் அல்லது மாரடைப்பு.
-
புகையால் சுவாசக் கோளாறு, காற்று மாசு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பு.
அதே நேரத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், விபத்தில்லா தீபாவளியை கொண்டாடவும் துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை வழங்கியுள்ளார்.