இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது:
“இந்த நேராய்வில் 1,330 திருக்குறள்களையும் முழுமையாக ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, தலா ரூ.15,000/- பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.2025–2026ஆம் ஆண்டுக்கான தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் இணையவழி மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தின் நகலை தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.”
அவர் மேலும் கூறினார்:
“நேராய்வில் பங்கேற்கும் மாணவர்கள் இயல் எண், அதிகாரம் எண், குறள் எண் போன்ற விவரங்களைத் தெரிவித்து திருக்குறள்களைச் சொல்லும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் அது கூடுதல் தகுதியாகக் கருதப்படும்.”
விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் https://tamilvalarchithurai.tn.gov.in என்ற தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்து, அதன் நகலை தருமபுரி மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் 30.11.2025க்குள் சமர்ப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு, தருமபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.