தருமபுரி, அக். 15:
தருமபுரி மாவட்ட சட்ட பணிகள் ஆணையம் சார்பில், சட்ட உதவி மற்றும் சட்ட அறிவை பொதுமக்களுக்கு எடுத்துரைப்பதற்காக தன்னார்வ சட்டப்பணியாளர்கள் (Para Legal Volunteers) சேர்க்கப்பட உள்ளனர். மொத்தம் 21 தன்னார்வ சட்டப்பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். அவர்கள் அலுவலர் உத்தரவுப்படி பணிபுரியும் நாட்களுக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு ரூ.750/- வீதம் மதிப்பூதியம் வழங்கப்படும்.
தகுதியாக குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தை 👉 https://dharmapuri.dcourts.gov.in/ என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
கடைசி தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் நிரந்தர பணிக்குரிய உரிமை கோர முடியாது; வேலை செய்த நாட்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படும். சேவை மனப்பான்மை கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.