தருமபுரி, அக். 14:
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உரையாற்றியபோது,
“விளையாட்டை எந்த அளவிற்கு மேம்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அடுத்த தலைமுறைக்கு ஒரு முன் உதாரணத்தை உருவாக்குகிறோம். விளையாட்டு என்பது வெற்றி, தோல்வி மட்டுமல்லாமல் ஒழுக்கம், அணி ஒற்றுமை மற்றும் தைரியமான குடிமகனை உருவாக்கும் முக்கிய பங்காகும்,”எனக் கூறினார்.
இப்போட்டிகளில் 100 மீ., 200 மீ., 400 மீ., 600 மீ., 1500 மீ. ஓட்டப்பந்தயம், தொடர் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல் மற்றும் ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “கல்லூரி ஆர்வமூட்டல் கல்லூரி களப் பயண வாகனம்” திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரே. சதீஷ், இ.ஆ.ப. அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பில் நடைபெற்ற கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி போன்ற நிகழ்வுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி. ஐ. ஜோதி சந்திரா, தருமபுரி நகர மன்ற தலைவர் திருமதி. லட்சுமி நாட்டான் மாது, நகர் நல அலுவலர் திரு. இலட்சியவர்ணா உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.