பாலக்கோடு, அக். 31 -
பாலக்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 1329 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் மாணவர்கள், குறிப்பாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு போதிய கழிப்பறை வசதி இல்லாததால், பள்ளி நிர்வாகம் புதிய கழிப்பறை கட்டிடம் அமைக்க நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தது.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பேரூராட்சி நிர்வாகம் சிறப்பு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து, பள்ளிக்கான கழிப்பறை கட்டிடத்தை கட்டி வழங்கியது. கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய கழிப்பறை கட்டிடத்தை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி அவர்கள் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன், திமுக மத்திய ஒன்றிய துணை செயலாளர் பி.எல். ரவி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் குமரன், வார்டு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

.jpg)