பாலக்கோடு, அக்டோபர் 07, 2025:
பேரூராட்சி கவுன்சிலர்கள் சரவணன், மோகன், ஜெயந்தி மோகன், ரூஹித், சாதிக் பாஷா, வகாப் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுமக்களின் நலனுக்காகவும், சுகாதாரமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் மூலம் ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டதன் மூலம் முத்துகவுண்டர் தெரு, சானார் தெரு, சாவடி தெரு, பள்ளிகூடத்தான் காலணி, பங்களா தெரு, புதுபட்டானியர் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பயன் பெறவுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய துணை செயலாளர் பி.எல். ரவி, நகர அவைத் தலைவர் அமானுல்லா, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் குமரன், மோகன், கணேசன், வடிவேல், ராமமூர்த்தி, மோகன், காமராஜர், ஐயப்பன், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

