பாலக்கோடு, அக். 10:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட 17வது வார்டு அண்ணாநகரில், ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவை பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி அவர்கள் தலைமையேற்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மத்திய ஒன்றிய துணை செயலாளர் பி.எல்.ஆர். ரவி, பேரூராட்சி கவுன்சிலர்கள் சரவணன், மோகன், ஜெயந்தி மோகன், ரூஹித், சாதிக் பாஷா, வகாப் ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுமக்களுக்கு சுத்தமான, சுகாதாரமான குடிநீர் வழங்கும் நோக்கில், 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்நவீன குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் நகர அவைத் தலைவர் அமானுல்லா, ஒன்றிய பிரதிநிதி பெரியசாமி, மீனவர் அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் குமரன், மோகன், கிளை செயலாளர்கள் ராஜீ, கணேசன், வடிவேல், ராமமூர்த்தி, மோகன், காமராஜர், ஐயப்பன், தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ஸ்ரீதர், தமிழரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.