தருமபுரி, அக்.10:
தமிழ்நாடு பொது நூலக்துறை அலுவலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில தலைவர் டி. சண்முகம் அவர்கள் தலைமை வகித்தார். மாநில செயலாளர் சு. குணசேகரன், மாநில பொருளாளர் கு. ராஜகுரு, முன்னாள் மாநில தலைவர் பிரபாகரன், முன்னாள் பொதுச்செயலாளர் சரவணன், மாவட்ட தலைவர் எம். முனி ராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், பொருளாளர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
கூட்டத்தில், காலியாக உள்ள நூலகர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், காலமுறை ஊதியத்தில் ஊர்ப்புற நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும், நூலகங்களை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும், நேரடியாக 3ஆம் நிலை நூலகர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற பல முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
மேலும், அனைத்து வகையான நூலகங்களுக்கும் நல்ல காற்றோட்டம், கழிப்பறை வசதியுடன் புதிய கட்டிடங்கள் அமைக்க வேண்டும், இளையோர்–மூத்தோர் ஊதிய முரண்பாடுகள் நீக்கப்பட வேண்டும், அண்ணா மறுமலர்ச்சி நூலகம் மற்றும் அறிவுசார்மையம் பொதுநூலகத்துறையின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும், வட்டார மற்றும் முழுநேர நூலகங்களுக்கு உரிய பணியிடங்கள் உருவாக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
.gif)

.jpg)