பாலக்கோடு, அக். 04 -
தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் “மக்களைக் காப்போம் – தமிழ்நாட்டை மீட்போம்” எழுச்சி பயணத்தின் 168வது சுற்றுப்பயணம் பாலக்கோட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அஇஅதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வ. முல்லைவேந்தன் தலைமையேற்றார். இதில், அஇஅதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் முன்னிலையில், திமுக, பாமக, தேமுதிக, கொங்கு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட மாற்றுக் கட்சி தொண்டர்கள் அஇஅதிமுகவில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில், தருமபுரி மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. பி. அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத் குமார் ஆகியோரும் கலந்து கொண்டு இணைந்தவர்களை வரவேற்றனர்.

.jpg)