தருமபுரி, அக்டோபர் 04:
மணிமண்டபத்தில் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் திருவுருவப்படத்திற்கு, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப., தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ. மணி ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதேபோல், பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. ஜி.கே. மணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தடங்கம் பெ. சுப்பிரமணி, முன்னாள் உள்ளாட்சி அமைப்புகள் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
பின்னர், அருகிலிருந்த தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களின் நினைவிடத்தில் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. நினைவிடம், நினைவுத்தூண் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சியை ஒட்டி, தியாகி சுப்பிரமணிய சிவா அவர்களை போற்றும் விதமாக நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற 6 பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பாராட்டு தெரிவித்து பரிசுகளை வழங்கினார். இந்த போட்டிகள் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு. வெ. லோகநாதன், பென்னாகரம் வட்டாட்சியர் திரு. சண்முகசுந்தரம், பாப்பாரப்பட்டி பேரூராட்சித் தலைவர் திருமதி. பிருந்தா, அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

.jpg)