தருமபுரி மாவட்டத்தில் தித்திக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, ஏழ்மையில் வாழும் மக்கள், பெற்றோர் இல்லாத குழந்தைகள், கைம்பெண்கள் போன்றோருக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பகிர்ந்து வரும் மை தருமபுரி அமைப்பினர், சமூக நலனில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஆதரவின்றி இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்யும் சேவையில் ஈடுபடும் மயான பணியாளர்களுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தலைமையாசிரியர் தேன்மொழிசேகர் மற்றும் ஆசிரியர் யோகாநந்தம் கலந்து கொண்டு பணியாளர்களை பாராட்டினர்.
நிகழ்ச்சியை மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், கிருஷ்ணன், சண்முகம், சையத் ஜாபர் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். தன்னார்வலர்கள் கணேஷ், அம்பிகா, நித்யா, இந்திரா உள்ளிட்டோர் பங்கேற்று பண்டிகை மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.