தருமபுரி, அக். 16, 2025:
வரும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, மை தருமபுரி அமைப்பின் சார்பாக ஏழ்மையில் உள்ளோர் மற்றும் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, தருமபுரி அரசு மருத்துவமனையில் பணியாற்றும் அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் மற்றும் உடற்கூறாய்வு மைய ஊழியர்கள் என மொத்தம் 20 நபர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி, அவர்களுக்கு தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
இந்த சமூக நல நிகழ்வில் எண்ணங்களின் சங்கமம் மாநில ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ், ஓய்வு பெற்ற ஆசிரியர் தண்டபாணி, மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் தமிழ்செல்வன், ஒருங்கிணைப்பாளர் அருணாசலம், அமைப்பாளர்கள் கிருஷ்ணன், செந்தில், சண்முகம், தன்னார்வலர்கள் கணேஷ், காதர் ஆகியோர் கலந்து கொண்டு புத்தாடைகள் வழங்கி, தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்தனர்.