தருமபுரி, அக். 18 -
தருமபுரி மாவட்ட இந்திய மூல நிவாசி காவல் படை சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழமுதன் தலைமையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பிரசாந்த் வரவேற்புரையாற்றினார். சரத், மாதேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் போது, இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அவர்களை இழிவுபடுத்திய சனாதனவாதிகளைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த நிகழ்வில் தாயக மக்கள் கட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதி பாண்டியன், மக்கள் தமிழகம் கட்சி நீலவழகன், அருண்குமார், மற்றும் ஒருங்கிணைப்பாளர் சரசுராம் ரவி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன சிறப்புரையாற்றினர். நிகழ்வில் மாவட்ட இந்திய மூல நிவாசி காவல் படை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் திரளாக பங்கேற்று ஒற்றுமையையும், கண்டன உணர்வையும் வெளிப்படுத்தினர்.