Type Here to Get Search Results !

நெற்பயிரில் தண்டு துளைப்பான், புகையான், இலை சுருட்டுப் புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் — மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. தகவல்.


தருமபுரி, அக். 16, 2025:

தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்கு மழை தொடங்கியுள்ள நிலையில், மாறி வரும் தட்பவெட்பநிலையால் சம்பா பருவ நெற்பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான், இலை சுருட்டுப் புழு தாக்குதல்கள் சில இடங்களில் தென்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

🔹 நெற்பயிரில் பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

1️⃣ தண்டு துளைப்பான்:
இது தாக்கிய பயிரில் இளம்பயிர் நடுக்குருத்து வாடிவிடும்; கதிர் பிடிக்கும் நேரத்தில் தாக்கினால் நெல் மணிகள் வெண்கதிர்களாக மாறும். இதைத் தடுப்பதற்காக —

  • பயிர்களை நெருக்கமாக நடாதீர்கள்.

  • முதிர்ந்த நாற்றுகளை நடும் முன் நுனியைக் கிள்ளி நடுவதால் பூச்சி முட்டைகள் அழிக்கப்படும்.

  • மாலை வேளைகளில் விளக்கு பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.

  • அதிக தாக்குதல் காணப்பட்டால், ஏக்கருக்கு

    • புளுபென்டியமைடு 20% WG – 50 கிராம் அல்லது

    • கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP – 400 கிராம்
      இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


2️⃣ இலை சுருட்டுப் புழு:
இது நெற்பயிரின் இலைகளை சுருட்டி பச்சையத்தை அழிக்கிறது. நிழலான பகுதிகள் மற்றும் அதிக யூரியா உரம் பயன்படுத்திய வயல்களில் அதிகம் காணப்படும்.

  • உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் 2–3 முறை பிரித்து இட வேண்டும்.

  • தாக்குதலைக் கட்டுப்படுத்த:

    • புளுபென்டியமைடு 20% WG – 50 கிராம் அல்லது

    • புளுபென்டியமைடு 20% W/W SC – 20 மில்லி அல்லது

    • கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP – 400 கிராம் அல்லது

    • குளோரான்ட்ரனிலிபுரோல் 18.5% SC – 60 மில்லி
      இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கலாம்.


3️⃣ புகையான்:
புகையான் தாக்குதலால் பயிர்கள் “தீய்ந்தது” போன்ற அறிகுறி காணப்படும். இதைத் தடுக்க:

  • பைமெட்ரோசின் 50% WG – 120 கிராம் அல்லது

  • குளோதியானிடின் 50% WG – 9 கிராம் அல்லது

  • டினோடிபியூரான் 20% SG – 60–80 கிராம் அல்லது

  • பிப்ரோனில் 5% SC – 400 மில்லி
    இவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.


4️⃣ பாசி வளர்ச்சி:
உவர் தன்மையால் வயலில் பாசி வளர்ந்தால் —

  • ஏக்கருக்கு 1 கிலோ காப்பர் சல்பேட்டை 20 கிலோ மணலுடன் கலந்து தண்ணீர் பாயும் 10 இடங்களில் பைகளில் கட்டி வைக்கவும்.

  • ஏக்கருக்கு 1 கிலோ காம்ப்ளக்ஸ் உரத்தை இலை வழியாகத் தெளிக்கவும்.


விவசாயிகளுக்கான அறிவுரை:

அனைத்து வேளாண்மை அலுவலர்களும் தங்கள் பகுதிகளில் நெல் வயல்களை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு மேலே கூறிய கட்டுப்பாட்டு முறைகள் குறித்து விளக்க வேண்டும். விவசாயிகள் வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், பசுந்தாள் உரப்பயிர்கள் பயன்படுத்தவும், யூரியா, டிஏபி உரங்களை அளவாக மட்டுமே பயன்படுத்தவும் வேண்டும். பயிர் சுழற்சியை பின்பற்றி தொடர்ச்சியான நெல் சாகுபடியை தவிர்க்கவும். பூச்சி தாக்குதல் அறிகுறிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ரெ. சதீஸ், இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies