தருமபுரி, அக். 17, 2025 —
மை தருமபுரி அமைப்பு, தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு மனிதநேய சேவைகளையும் தன்னார்வ பணிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. தினந்தோறும் அன்னதானம், ஆதரவற்றோருக்கு நல்லடக்கம், இரத்ததானம், பேரிடர் கால உதவிகள் போன்ற சமூகப் பணிகளில் ஈடுபட்டு வரும் இவ்வமைப்பு, வரவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, ஏழ்மையில் வாழும் 50 கைம்பெண்களுக்கு மளிகை பொருட்கள், இனிப்புகள், புத்தாடைகள் ஆகியவற்றை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துகளை தெரிவித்தது.
இந்நிகழ்வில் மை தருமபுரி கௌரவத் தலைவர் சி.கே.எம். ரமேஷ், தருமபுரி பிஎஸ்பி டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ஸ் நிர்வாக இயக்குனர் சுரேஷ், தீபக்’ஸ் மருத்துவமனை சார்ந்த சிந்து தீபக், பத்திர எழுத்தாளர் கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும், கட்டுமான தொழிற்சங்க தலைவர் வீரமணி, முனைவர் கிருஷ்ணன், முனைவர் அர்ஜீனன், மலேசியா தேவகி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியை மை தருமபுரி அமைப்பின் நிறுவனத் தலைவர் சதீஸ் குமார் ராஜா, செயலாளர் முனைவர் தமிழ்செல்வன், அமைப்பாளர்கள் செந்தில், சண்முகம், சையத் ஜாபர், தன்னார்வலர்கள் கணேஷ், வள்ளி, அம்பிகா, இந்திரா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.