தருமபுரி, அக். 17 —
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டேக்வோன்டோ போட்டிகள் அண்மையில் தர்மபுரி டான் பாஸ்கோ கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்லூரிகளிலிருந்து 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இதில், தர்மபுரி அரசு கலைக் கல்லூரி தாவரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் கே. தில்லைநாதன் 74 கிலோ எடை பிரிவில் இரண்டாம் இடம் பெற்று வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே கல்லூரி தமிழ் துறை இரண்டாம் ஆண்டு மாணவர் கே. யுவராஜ் 58 கிலோ எடை பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கலப்பதக்கம் வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
பதக்கம் வென்ற மாணவர்களை கல்லூரி முதல்வர் முனைவர் கோ. கண்ணன், உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு. பாலமுருகன், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு ஆர்வலர்கள் பாராட்டினர்.